puthuyuvan's profile picture. அழைத்தவர் யாருமின்றி..அர்த்தம் இல்லா வாழ்விது...

puthuyuvan

@puthuyuvan

அழைத்தவர் யாருமின்றி..அர்த்தம் இல்லா வாழ்விது...

சொல்லோடு சேராத மௌனம் என்னோடு நீள்கிறது.... நிலவோடு சேரா பகலும்... ஓளிக்குள் ஒளிந்திருக்கும் இரவும் போல..... பு.யு


puthuyuvan reposted

நீங்கள் விரும்புகிற காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டுமானால், இடையிடையே நீங்கள் விரும்பாத சில காரியங்களையும் செய்துதான் தீரவேண்டும். -நகுலன்


puthuyuvan reposted

மாறி விட வேண்டும் என்ற எண்ணம் மாறி, முற்றாக மாறி,கனவாகிவிட வேண்டும்.கனவுக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிட வேண்டும். பொய்யாக இருக்கலாம்.கற்பனைச் சாத்தியமற்றதாக இருக்கலாம். -ஜே.ஜே.சில குறிப்புகள்


puthuyuvan reposted

தீக்குச்சி விளக்கை ஏற்றியது எல்லோரும் விளக்கை வணங்கினார்கள் பித்தன் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான் 'ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்?' என்று கேட்டேன் 'ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா?' என்றான் -கவிக்கோ #TeachersDay2023


puthuyuvan reposted

"பத்துல ஏழு போனா மீதி எத்தன..? அஞ்சும் நாலும் எவ்வளவு..? நாலும் ஆறும் பதினொன்னு.. இது சரியா..தப்பா..?" என கேள்விகளை வீசிக்கொண்டிருந்த மிஸ்ஸிடம் கேட்க ஒரு கேள்வியிருந்தது.. லட்சுமிக்குட்டியிடம். "வண்ணத்துப்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு..?" - கண்மணிராசா


puthuyuvan reposted

ஒரு காதலை இழக்க ஒரு காரணமும் தேவையில்லை. நீ எந்தக் குற்றமும் செய்திருக்க வேண்டியதில்லை. அங்கே அவ்வளவு மனப்பூர்வமான காதல் இருந்தது. அதனாலேயே அது இழக்கப்பட்டது. அவ்வளவுதான். - மனுஷ்ய புத்திரன்


puthuyuvan reposted

குளத்தை விட்டுப் பறந்து போகும் போது பறவைகள் சொல்லிப் பறப்பதில்லை. எங்கே போகிறாய் எப்போது வருவாய் என்று குளமும் அவற்றைக் கேட்பதில்லை. குளங்கள் அங்கேயே இருக்கின்றன. பறவைகள் மறுபடியும் வருகின்றன. அந்த ஸ்நேகம் எத்தனை அழகானது. ~ பாமதி சோமசேகரம் ~


Loading...

Something went wrong.


Something went wrong.